Breaking News
Home / LATEST / சூட்டினால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறதா! உடனடி தீர்வு பெற…

சூட்டினால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறதா! உடனடி தீர்வு பெற…

சூட்டினால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறதா! உடனடி தீர்வு பெற…

கோடையில் வெளியேறும் அதிகப்படியான வியர்வையால் உடலில் இருக்கும் நீரின் அளவு கணிசமாக குறைந்துவிடுகிறது. இதானல் தான் நீர்க்கடுப்பு உண்டாகிறது.
நீர்க்கடுப்பு என்பது சிறுநீரக பாதையில் உண்டாகும் அழற்சி. இது சிறுநீரகத்திலோ, சிறுநீரகம் வரும் பாதையிலோ, சிறுநீரகம் தேக்கி வைக்கும் இடத்திலோ கூட உண்டாகலாம்.

இதனால் சிறுநீர் போகும் போது தாங்க முடியாத வலி உண்டாகும். சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாககூடும். சிலருக்கு காய்ச்சல், சிலருக்கு உறுப்பில் வலி (பெரும்பாலும் பெண்களே இந்த தொற்றுக்கு உள்ளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது) போன்றவை வரக்கூடும். ஈகோலி என்னும் பாக்டீரியாவால் இவை அடிக்கடி வரலாம் என்றாலும் கோடையில் அதிகப்படியான நீர் வெளியேற்றம் காரணமாகவே இவை வரக்கூடும்.

முந்தைய காலத்தில் கோடையில் கேழ்வரகு கூழ், கம்பங்கூழ், நீராகாரம், நுங்கு, பதநீர், இளநீர் போன்றவற்றை கோடை உணவாக எடுத்துகொண்டார்கள். இதனால் இத்தகைய பிரச்சனையை அவர்கள் அதிகம் எதிர்கொள்ளவில்லை. அதிலும் பெண்கள் நேரடியாக வயலில் இறங்கி கோடையிலும் வேலை செய்தவர்களே. இந்நிலையில் இத்தகைய பிரச்சனையை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் தெரிந்துகொள்வோம். இது நிச்சயம் இப்போது நமக்கு உதவும்.

உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் தண்ணீர் குடிக்காத தான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். போதுமான தண்ணீர் இல்லாமல் சிறுநீரில் தாதுக்கள் அதிகமாகும் சேர்ந்து படி மாகி சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி விடும். இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது. நீர்க்கடுப்பு குறைபாட்டை நீக்க இந்த கஷாயத்தை தினமும் குடித்து வாருங்கள்

தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை-ஒரு பிடி
சீரகம்-10 கிராம்
மஞ்சள்தூள்-2 சிட்டிகை

செய்முறை

முதலில் வெந்தயக்கீரை எடுத்து ஆய்ந்து சுத்தப்படுத்தி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 400 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் வெந்தய கீரை, சீரகம் மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி அளவாக சுண்ட வைத்து இறக்கி வைத்து வடிகட்டி குடிக்கவும்.

பயன்கள்

இந்த கசாயம் நீர்க்கடுப்பு பிரச்சனையை போக்க உதவும் அருமருந்தாகும். இந்த கசாயத்தை தயார் செய்து காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.

இரவு படுக்கும் படுக்கப் போகும் முன்

வெற்றிலை, மிளகு, உலர் திராட்சை இவை மூன்றும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கும்.

மாற்று வைத்தியம்..

பார்லி அரிசி தண்ணீர் – நீர்க்கடுப்புக்கு வீட்டு வைத்தியம்
சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு பார்லி என்று சொல்லலாம். டயட் இருப்பவர்கள் முதல் அனைவருக்குமே ஏற்றது பார்லி அரிசி. இதை கஞ்சியாக்கி மேலாக்க வரும் நீரை குடித்தால் சிறுநீர் எரிச்சல் சிறிது நேரத்திலேயே குறையக்கூடும்.

அதிக தண்ணீர் பருகாதவர்கள் கோடையில் நீர்க்கடுப்புக்கு உள்ளாகும் போது பார்லி அரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதற்கு 10 மடங்கு அளவு நீர் விட்டு கொதிக்க விடவேண்டும். குக்கரிலும் 5 முதல் 6 விசில் வரை விட்டு இறக்கி அந்த நீரை மேலாக்க எடுத்து குடித்தால் சிறுநீர் கடுப்பு உடனே குறையும். தினமும் இரண்டு முறை எடுக்கலாம்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும் பச்சைமிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

Check Also

நீங்க தூங்கறப்போ தலையணை வைத்து தூங்குவீங்களா! அப்போ இத பாருங்க..

நீங்க தூங்கறப்போ தலையணை வைத்து தூங்குவீங்களா! அப்போ இத பாருங்க.. இன்றைய சூழ்நிலையில் பலருக்கும் தலையணை இல்லாத தூக்கம் என்பது …