Breaking News
Home / LATEST / நீங்க தூங்கறப்போ தலையணை வைத்து தூங்குவீங்களா! அப்போ இத பாருங்க..

நீங்க தூங்கறப்போ தலையணை வைத்து தூங்குவீங்களா! அப்போ இத பாருங்க..

நீங்க தூங்கறப்போ தலையணை வைத்து தூங்குவீங்களா! அப்போ இத பாருங்க..

இன்றைய சூழ்நிலையில் பலருக்கும் தலையணை இல்லாத தூக்கம் என்பது உப்பில்லாத உணவு போல்தான் அவ்வளவு கஷ்டமாக இருக்கும் தலையணை வைத்து உறங்குவது என்பது நமது உடலுக்கு சுகமானதாக இருந்தாலும் அது நமது உடலுக்கு தீங்கானது என சொல்கின்றனர் சமீபத்திய ஆய்வுகள்.

நீங்கள் விரும்பும் தூக்க நிலை என்ன?

ஒவ்வொருவரும் ஒரு தூக்க நிலையை பின்பற்றுவார்கள். நீண்ட கடினமான நாளுக்குப் பிறகு, உடனடியாக நீங்கள் விரும்பும் தூக்கத்தை பெற சரியாக தூங்குவது அவசியம். உங்கள் கால்களுக்கு இடையே தலையணையை வைத்து தூங்குவதால் தூக்கம் விரைவாக வருவது மட்டுமின்றி உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் வழங்குகிறது.

சிலருக்கு தலையணை இல்லையென்றால் தூக்கம் வராது, உங்களுக்கு குறைந்தது இரண்டு தலையணைகள் தேவை. ஒன்று உங்கள் தலைக்கு ஒன்று உங்கள் கால்களுக்கு இடையே வைத்துக்கொள்ள உதவும். உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைப்பது ஆறுதல் தரும், மற்றும் முழங்கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தத்தை நீக்குகிறது

முழங்கால்களுக்கு இடையில் ஒரு உறுதியான தலையணையை வைத்து தூங்குங்கள். முக்கியமாக இந்த தலையனை உங்கள் முழங்கால்களில் இருந்து கணுக்கால் வரை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் முழங்கால்கள் மற்றும் கணுக்கால் சரியாக ஒரே நிலையில் இருக்கும், என்பதால் சீராக தூக்கம் வரும்.

தலையணை வைத்து உறங்கும் பழக்கம் என்பது ஆதிவாசிகளிடமிருந்து அதன் பின்னர் வந்தவர்கள் இடமும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள் சாயும் போதும் உட்காரும் போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து அதில் ஒரு வித சுகத்தைக் கண்டு அப்படியே மிருதுவான தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்து தூங்குவது வழக்கமாகி இருக்கிறது

இந்தப் பழக்கம் ஆரம்பத்தில் ராஜாக்கள் பெரிய பணக்காரர்கள் இடத்தில் மட்டுமே இருந்தது ஆனால் நாளடைவில் இந்த பழக்கத்திற்கு அனைவரும் அடிமையாகி விட்டனர். இன்று அது வளர்ந்து விதவிதமான தலையணைகளாக ஒவ்வொரு வீட்டிலும் இடம் பிடித்திருக்கின்றது

நாம் நடக்கும்போது எப்படி உடலை நேராக வைத்து நடக்கிறோமோ அது போலதான் உறங்கும்போது மேடுபள்ளம் இல்லாத சமமான தரையில் நேராகப் படுத்து உறங்கும் என்றும் அப்படிப் படுக்கும்போது எக்காரணம் கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது வானத்தைப் பார்த்து தூங்க வேண்டும்

மெத்தையில் படுப்பது பஞ்சு நிரப்பிய மிருதுவான தலையணையை தலைக்கு வைத்து வைப்பது ஆகியவற்றால் கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது அதுமட்டுமில்லாமல் கழுத்து நரம்புகளும் பாதிக்கப்படும் அதனால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பகுதிகளில் தொடங்கி பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்கும்

என்னால் தலையணை இல்லாமல் ஒரு நாளும் தூங்க முடியாது என்பவர்கள் அதிக பாதிப்பை விளைவிக்கக்கூடிய மெல்லிய மிருதுவான ஸ்பிரிங் தன்மையுள்ள தலையணை பயன்பாட்டை தவிர்த்து குறைவான பாதிப்பைத் தரும் தடிமனான தலையணையை பயன்படுத்தலாம் இவை அதிக உயரம் இல்லாமல் சின்னதாகவும் இயற்கையான பொருட்களால் ஆனதாகவும் இருக்க வேண்டும் தலையணையை தலைக்கு மட்டும் வைக்காமல் தோள்பட்டையில் இருந்து தலை முழுவதும் வைப்பது நல்லது நாம் தான் தலையணைக்கு அடிமையாகி விட்டோம் ஆனால் முடிந்தவரை தலையணை பயன்படுத்துவதை குறைத்து தலையணை இல்லாமல் சமமான தரையில் உறங்க பழகுவோம் அது மட்டுமல்லாமல் தலை வைத்து தூங்குவது நல்லது இல்லை என்பதை அடுத்த தலைமுறைக்கு அழுத்தமாகச் சொல்லி அவர்களின் ஆரோக்கியத்திற்கு வித்திடுவோம்

Check Also

சூட்டினால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறதா! உடனடி தீர்வு பெற…

சூட்டினால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறதா! உடனடி தீர்வு பெற… கோடையில் வெளியேறும் அதிகப்படியான வியர்வையால் உடலில் இருக்கும் நீரின் அளவு கணிசமாக …